வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வவுனியா இராசேந்திரபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விநாயகபுரத்தில் இன்று (03.01.2021) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இராசேந்திரகுளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில் மோட்டார் சைக்கிள் வீதியின் அருகேயுள்ள மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த 25, 26 வயது இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply