திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள ராஜவந்தான் மலைக்கு இன்று காலை தமிழ் மக்கள் மற்றும் சைவ மத குருக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்றபோது பௌத்த பிக்கு ஒருவர் வீதியை மறித்து மக்களை தொடர்ந்து செல்ல விடாது தடுத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அங்கு சென்ற மக்களை இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் மிகவும் கீழ்த்தரமாக பேசியும் அவர்களின் தொலைபேசிகளை பறித்து எறிந்தும் அடாவடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதன் போது அங்கு நின்ற பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் மக்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்களையும் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ராஜவந்தான் மலையின் கீழ் சகாயபுரம் (வெட்டுக்காட்டுச்சேனை) மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.
அத்துடன், அப்பிரதேச மற்றும் அயல் பிரதேச மக்கள் மலைக்கும் சென்று வழிபட்டு வந்த நிலையில், மூன்று வருடங்களிற்கு முன்னர் மலையின் மேல் இருந்த வழிபாட்டிடம் அழிக்கப்பட்டு, அங்கு பௌத்த சின்னங்களை நிறுவும் வேலைகள் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media