வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டின் சில பகுதியில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் மற்றும் மேல் மாகாணத்திலும் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடும்.

அதேவேளை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply