வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருகிறது.
யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெறவுள்ள நிலையில் மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.
இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான்,வைரவர் போன்ற விக்கிரகங்களில் இருந்தே நீர் போன்ற திரவம் வடிகிறது.
இதனை அறிந்த பெருமளவான பொதுமக்கள் ஆலயத்துக்குச் சென்று நீர் வடியும் விக்கிரகங்களை பார்வையிட்டு வணங்கிச் செல்கின்றனர்.
இது தொடர்பில் ஆலய ஸ்தபதி அராலியூர் ஈஸ்வரன் தெரிவிக்கையில் விக்கிரகங்களின் வாயில் இருந்து இவ்வாறு திரவம் வருவது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயற்பாடு என்றார்.
Follow on social media