ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழு ஒன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media