யாழ்.மாவட்டத்தில் 13ம் திகதிவரை மழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.மாவட்டத்தில் தற்போதுள்ள மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 13ம் திகதி வரை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் சூரியராஜா கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடாநாட்டில் நேற்று மதியம் ஆரம்பித்த மழையானது தொடர்ச்சியாக பரவலாக நள்ளிரவு தாண்டியும் நீடித்தது. வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பநிலையே தற்போது மழைக்கு காரணம்,

எனினும் தாழமுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply