யாழ். பொலிஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்து கொண்ட இளைஞன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தறுபட்ட நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.பொம்மைவெளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுத்து காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணையை நிறைவேற்றியமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இளைஞன் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞன் உடமையில் இருந்த பிளேட்டால் கழுத்தை அறுத்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து குறித்த இளைஞன் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting