யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இளவாளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், சைக்கிளில் பயணித்த மற்றுமொரு இளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Follow on social media