யாழ் சண்டிலிப்பாயில் டிப்பர் மோதி இளைஞன் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மானிப்பாயிலிருந்து சண்டிலிப்பாய் நோக்கி பயணித்த இளைஞன் சண்டிலிப்பாய் சந்தியை கடக்கும்போது சங்கானையிலிருந்து வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply