யாழ் இளைஞர்கள் தமிழகத்தில் தஞ்சம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்த இரு இளைஞர்கள் கடல்வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரியுள்ளனர்.

ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று புதன்கிழமை குருநகர் பகுதியில் இருந்து படகொன்றின் மூலம் சென்று, இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகில் கரையிறங்கியவேளை தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக

யாழ்ப்பாணம், மன்னார் கடற்பரப்புக்கள் ஊடாக தமிழகம் சென்று தஞ்சமடைவோர் எண்னிக்கை அதிகரித்து வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ம் திகதியில் இருந்து இன்று வரை 77 இலங்கையைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply