யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் இன்றையதினம் மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா தற்கொலை செய்தாரா என்று விசாரணைகளின் பின்னரே தெரிய வரும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 17ஆம் நோயாளர் விடுதியிலிருந்தே அந்தப் பெண் நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply