யாழில் 22 வயது இளைஞனின் உயிரை பறித்த கேம் மோகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தொலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த 22 வயதான இளைஞன் தன்னை தானே மாய்த்துள்ளான்.

குறித்த சம்பவம் யாழ்.இளவாலை – கூவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ளது.

அதில் மூழ்கிப்போன அவர் நேற்று காலை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.

இளைஞனின் சடலத்தில் காதுகளில் மாட்டிய ஹெட்செட் மற்றும் பொக்கெட்டில் அவரது தொலைபேசி என்பன காணப்பட்டுள்ளது.

சடலம் யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு உடக்கூற்றுப் பரிசோதனை மற்றும் இறப்பு விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை தொலைபேசி கேம் விளையாடிய பல இளைஞர்கள் இந்தியாவில் உயிர் மாய்த்தமை குறிப்பிடத்தக்கது. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தொடர்பக மிகுந்த அவதானத்துடன் அல்லது முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting