யாழில் வைத்தியரின் கார் மின் கம்பத்துடன் மோதி விபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ் தென்மராட்சியின் வரணிப் பகுதியில் வைத்தியர் ஒருவரின் கார் நேற்றிரவு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தனது குடும்பத்துடன் யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் வீதியில் இருந்த மின் கம்பத்துடன் கார் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதங்களுக்கு உள்ளதுடன் காரில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply