யாழில் பாடசாலை மாணவிக்கு கொரோனா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணத்தில் நேற்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் ஒருவர் 14 வயதான பாடசாலை மாணவியாவார்.

மருதனார் மட கொத்தணியுடன் தொடர்புடைய இருவரே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 14 நாள் தனிமைக்காலம் முடியும் போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையிலேயே இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று தொற்றிற்குள்ளான மற்றையவர் 27 வயதான இளைஞனாவார்.

மருதனார்மட கொத்தணி 133 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply