யாழ்ப்பாணத்தில் உறக்கத்தின் போது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி உறக்கத்தில் சுயநினைவற்று இருந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன்போது சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சிறுமியின் சடலம் இறப்பு விசாரணைகளின் பின் உடற்கூற்று பரிசோதனைக்கு சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவ முன்னிலையில் உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த சிறுமி இரண்டு மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
Follow on social media