கைவிசேடம் கொடுக்க மறுத்தமையினால் வெளிநாட்டிலிருந்து வந்தவர் மீது இருப்பு கம்பியினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் புதுவருட தினத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு கைவிசேடம் வழங்கியுள்ளார். இதை கேள்வியுற்று மதுபோதையில் சென்றவர் தனக்கும் கைவிசேடம் தருமாறு கோரினார்.
இதன்போது கைவிசேடம் கொடுத்தவர் நாளை காலை அவரை வருமாறு கோரினார். இதன்போது மதுபோதையில் இருந்தவர் அவர் மீது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
தாக்குதலால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Follow on social media