யாழில் உறக்கத்திலேயே உயிரிழந்த சிறுமி – 2 மாத கர்ப்பவதி என உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 18 வயதான சிறுமி ஒருவர் உறக்கத்திலேயே உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்.

இந்நிலையில் குறித்த சிறுமி 2 மாத கர்ப்பவதியாக இருந்தார். என உடற்கூற்று பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரவெட்டி பகுதியை சேர்ந்த 18 வயதான குறித்த சிறுமி உறக்கத்தில் இருந்த நிலையில்,

அவர் எந்தவொரு அசைவுமற்று இருப்பதாக கூறி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிக்கையிட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனையினை மேற்கொண்டிருந்த சட்டவைத்திய அதிகாரி கனசபாபதி வாசுதேவா சிறுமி 2 மாத கர்ப்பவதியாக இருந்தார் என உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிட்டுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply