காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு அவர் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இளைஞன் சடலமாக தூக்கில் தொங்கியதை கண்ட உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள்