யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று பிற்பகல் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் வீட்டில் கதவு மற்றும் ஜன்னல்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன.
அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய் தகராறு மோதலாக மாறிய நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media