முதியவர்கள் மீது வாள்வெட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் நகைகள் பணங்களை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று நேற்று 16.04.2022 அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலுத் தெரியவருகையில் தேவிபுரம் மஞ்சல் பாலத்திற்கு அருகில் வீடுஒன்றில் வயோதிப தம்பதிகள் வாழ்ந்து வந்துள்ளார்கள்.

புகுந்த கொள்ளையர்கள் குடும்ப பெண்மணிமீது சராமாரியான தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் வயோதிப தந்தை மீது வாள்வெட்டு தாக்குதலும் இடம்பெற்றுள்ளது இதன் வீட்டில் இருந்த பெண்மணியின் கழுத்தில் மஞ்சல் கயிற்றில் இருந்த முக்காப்பவுண் தாலியினை கொள்ளையர்கள் அறுத்துள்ளதுடன் வயோதிபர் மீதும் சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்

அதிகாலை இரவு வேளை அல்லலுற்று வயோதிப தம்பதிகள் கிராம அமைப்புக்களின் உதவியுடன் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் மேம்ப நாய்கள் அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply