முடங்கியது திருகோணமலை ; இராணுவத்தினர் குவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 856 பேராக அதிகரித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், திருகோணமலை மத்திய வீதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வீதி முடக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், நேற்றைய தினம் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையில் அதிகரிக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள்!

இதனை அடுத்து குறித்த கடை தொகுதிகளில் பணி புரியும் வேலை ஆட்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த பரிசோதனையில் மேலும் ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய வீதி மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.

பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக குறித்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் முடக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இதேவேளையில், இன்று சனிக்கிழமை திருகோணமலையில் அதிகளவானோருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow on social media
CALL NOW

Leave a Reply