முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் மீது ஆசிட் தாக்குதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காலி – தலாபிட்டி பகுதியில் வைத்து மூவர் மீது அமில தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவர் மீதும் ஆண் ஒருவர் மீதும் உந்துருளியில் வருகை தந்தவர்கள் இவ்வாறு அமில (ஆசிட்) தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அமில தாக்குதலுக்கு இலக்கான மூவரும் காலி கராபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பிச்சென்றுள்ளார் என்பதோடு அவரை கைது செய்வதற்கு காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply