மீண்டும் இணைகிறதா ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி? பார்த்திபனின் பதில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு கார்த்தி, பார்த்திபன் இருவரும் புதிய படம் மூலம் இணைய இருப்பதாக வந்த செய்திக்கு நடிகர் பார்த்திபன் பதில் அளித்துள்ளார்.

பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த மலையாள படம் அய்யப்பனும் கோஷியும். இந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் அதனை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ் ரீமேக்கில் பார்த்திபன் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில சமீபத்தில் ஆர்.பார்த்திபன் தான் சிம்புவுடன் விரைவில் இணைய வாய்ப்பு உள்ளது என கூறி இருந்தார். அதனால் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் சிம்பு மற்றும் பார்த்திபன் நடிக்க வாய்ப்பு உள்ளது என செய்தி பரவியது.

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு கார்த்தி மற்றும் பார்த்திபன் இருவரும் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் படம் மூலம் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்த்திபனே ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

“இச்செய்தி நற்செய்தி ஆகலாம்! ஆனால் இதுவரை தயாரிப்பாளர் திரு கதிரேசனை தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே…” என அவர் கூறி இருக்கிறார். அதனால் அவரை தயாரிப்பாளர் அணுகவே இல்லை என்பது உறுதி ஆகி உள்ளது. அதனால் அய்யப்பனும் கோஷியும் ரீமேக் பற்றி தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டால் தான் உறுதியாகும்.

Follow on social media
CALL NOW

Leave a Reply