மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து முதியவர் பலி, 3 பேர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்கும்படி அரசு கூறி வரும் நிலையில், மின்சார வாகனங்களின் பேட்டரி தொடர்பான விபத்து, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மின்சார வாகனங்களின் பேட்டரி தீப்பற்றி எரிந்த விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள வல்லுநர் குழு ஆய்வு செய்ய உள்ளது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரியை வீட்டில் சார்ஜ் செய்யும்போது திடீரென வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். அவரது மனைவி, மகன், மருமகள் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான பியூர் இ.வி. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply