நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கியதை எதிர்த்து அவரது தந்தை டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில், படத்தின் தயாரிப்பாளர், நிதித்துறையினருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில், நிதித்துறை சியர் உத்தம்சந்திடம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக 5 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்ததாகவும், படம் வெளியாக பெருமுயற்சி எடுத்த தங்களிடம் கலந்தாலோசிக்காமலேயே சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டதாகவும் டி.ராஜேந்தர் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Follow on social media