மாத்தறையில் பொலிஸார் – போராட்டக்காரர்கள் இடையில் கடும் மோதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் டொலர் நெருக்கடியால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலக கோரி மக்கள் 11வது நாளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்,

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டானது, கொழும்பு செயலகம், காலி முகத்திடலில், ரம்புக்கனை மற்றும் மாத்தறை உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றது,

இதேவேளை நேற்றைய தினம் ரம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மாத்தறை ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரோடு மோதிக் கொள்வதாக காணொளிகள் கசிக்கின்றதாக முகநூலில் ஜீவன் பிரசாத் என்பவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தேவை மோதல்.. அதை தவிப்பதே சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply