முல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒரு இளைஞன் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட வரும் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு நகரைஅண்டிய பகுதிகளில் இன்று மாலை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக உந்துருளி ஒன்றில் வீதியால் பயணித்தவர்கள் மேல், சிலாவத்தை பகுதியில் மரம் ஒன்றின் கிழை ஒன்று முறிந்த வீழ்ந்துள்ளது.
இதன்போது 33 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கொக்குத்தொடுவாய் மேற்கினை சேர்ந்த இ.ஜெம்சி விகேந்திரன் என்ற குடும்பஸ்தர் உயரிழந்துள்ளதுடன் நீராவிப்பிட்டியினை சேர்ந்த 21 அகவையுடைய எட்வேட் எமில்டன் என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன அந்த வகையில் குறித்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media