மரக்கறி விநியோகம் 28ஆம் திகதி இடம்பெறாது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறி விநியோகம் நாளை மறுநாள் இடம்பெறாது என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் ஹர்த்தாலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், 28ஆம் திகதி மரக்கறி கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என கொழும்பு மெனிங் சந்தை உள்ளிட்ட பல பொருளாதார நிலையங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting