மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (16) இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதன் போது மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டனர்.

திருவிழா திருப்பலி இடம் பெற்ற போது ஆலயத்தை சூழ பொலிஸாரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம் பெற்றது.

இன்று (17 ) காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting