மந்திகை மருத்துவமனையில் மருத்துவர், தாதியர் தனிமைப்படுத்தலில்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த ஒருவருக்குக் கொரொனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மந்திகை ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், தாதியர் உட்பட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புலோலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று வைத்தியசாலையின் 7ஆவது விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டைநோ ஆகிய அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது.

இன்று வெளியான பி.சி.ஆர். முடிவுகளில் அவருக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அந்த விடுதியில் பணியாற்றிய – சிகிச்சையளித்த மருத்துவர், தாதியர், சிற்றூழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply