மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) கலந்துகொண்ட நிகழ்வில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு – வாகரையில் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) தலைமையில் மீன்வளர்ப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (29-04-2022) இடம்பெற்றுள்ளது.
இந்த திட்டம் 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 80 பயனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது அங்கு கூடியிருந்த கிராம மக்கள் இத்திட்டத்திற்கு தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்ததுடன், பெண்கள் கடுமையாக தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக கூட்டத்தில் இருந்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் அவசர அவசரமாக வெளியேறிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Follow on social media