ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

திரைப்படங்களை விமர்சனம் செய்து பாப்புலர் ஆனவர் ப்ளூ சட்டை மாறன். அவர் விமர்சனம் செய்து படங்களில் வசூலை எல்லாம் கெடுக்கிறார் என சினிமா துறையினர் அதிகம் கோபத்தில் இருக்கின்றனர். இவ்வளவு பேசும் அவர் ஒரு படம் எடுத்து காட்டட்டும் என ஒப்பனாகவே சவால் விட்டனர்.

அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக தற்போது ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கி நடித்து இருக்கிறார் அவர். சென்சார் பிரச்சனைக்கு பிறகு அந்த படம் தற்போது ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதில் இந்து மக்களுக்கு எதிரான காட்சிகள் இருக்கிறது, அதை நீக்க வேண்டும் என சொல்லி ஒரு கட்சியை சேர்ந்தவர் எச்சரித்து இருக்கிறார்.

அதை ப்ளூ சட்டை மாறனே ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

“இந்து மக்களுக்கு எதிரான காட்சிகளை ப்ளூ ஷார்ட் மாறன் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கம் ஆன்டி இண்டியன் படத்தை தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும் – இந்து மக்கள் கட்சி ராம ரவிக்குமார் எச்சரிக்கை” என புகைப்படத்தோடு பதிவிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply