பொது போக்குவரத்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை உடன் கைது செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் தனியார் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களை கைது செய்யுமாறு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வீதியை இடையூறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Follow on social media