பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் மந்திகை வைத்தியசாலையில் தலைவலி, இருமல், வாந்தி என்பவற்றுக்காகச் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் என்றும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 7ம் இலக்க விடுதி தற்போது மூடப்பட்டது.
இவருக்குத் தொற்று ஏற்பட்ட வழி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பாக ஆராயப்படுகின்றது என்றும் சுகாதாரப் பிரிவினரிடம் இருந்து அறிய முடிகின்றது
Follow on social media