நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல நடிகை மீண்டும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தலைவர் 169 என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் பரவி வருகிறது. ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் 2010-இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘எந்திரன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தலைவர் 169 படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow on social media