பீஸ்ட் படம் பார்க்க மதுபோதையில் வந்த ரசிகர்கள் மீது தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது. காலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் கட்அவுட் வைத்து மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து மேளம் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வடுகநாதன் திரையரங்கில் 3 மணி காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் திரைப்படம் பார்க்க வந்திருந்தனர். அப்போது மயிலாடுதுறை, நெய்வெலியில் இருந்து வந்த நண்பர்களான 8 பேர் விஜய் ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு சிதம்பரம் வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் மதுபோதையில் திரையரங்கிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை தடுத்த திரையரங்கு ஊழியர்கள் மதுபோதையில் வந்த நபர்களிடம் வாக்கு வாத்தத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் கண்முன்னே ரசிகர்கள் மற்றும் திரையரங்க ஊழியகர்களுக்கிடையே கடுமையான மோதல் உருவானது. இதில் ரசிகர்களுக்கு மூக்கு மற்றும் வாய் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் கண் முன்னே நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow on social media
CALL NOW

Leave a Reply