பிரதமர் மஹிந்தவின் வீடு முற்றுகை – தொடரும் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பிரதமர் மஹிந்தவின் வீடு முற்றுகையிடப்பட்டதால் பதற்றம் நிலவுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை அரசாங்கத்திக்கு எதிராக மக்கள் போராட்டம் நாடாளவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதால பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டுள்ள நிலையில் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்றைய தினம் நாடாளவிய ரீதியில் 300 மேற்பட்ட தொழிற்சங்கள் இணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply