பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

2022ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்திருக்கின்றார்.

2022 சாதாரண தர பரீட்சை (O/L) மே 23 (திங்கட்கிழமை) முதல் ஜூன் 1 ம் திகதி (புதன்கிழமை) வரை ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவித்தார்.

அதேபோல தரம்- 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 6ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் 2022 உயர்தரப் பரீட்சை (A/L) ஒக்டோபர் 17ம் திகதி முதல் நவம்பர் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து பரீட்சைத் தாள்களும் மே 21ஆம் திகதிக்குள் அனைத்து மாகாணக் கல்வி ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய கூட்டு மையங்களுக்கும் வழங்கப்படும் எனவும்

542 ஒருங்கிணைப்பு நிலையங்களின் கீழ் இயங்கும் 3842 பரீட்சை நிலையங்களில் 407,129 பாடசாலை பரீட்சார்த்திகள்

மற்றும் 110,367 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என மொத்தம் 517,496 பரீட்சார்த்திகள் 2022 சாதாரண தர (O/L) பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பரீட்சைகளின்போது கடமையாற்றும் கண்காணிப்பாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளும் விரைவில் வழங்கப்படும் என்றும் கூறினார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply