நீரில் மூழ்கி நபரொருவர் மாயம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெதுரு ஓயா நீர் நிலையில் நேற்று (29) மாலை குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுஹெர, இதுல்கொடகந்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சுழியோடி பொலிஸ் அதிகாரிகளுடன் கடற்படையினரும், மீனவர்களும் கூட்டாக இணைந்து நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சிலாபம் பொலிஸார் மேலும் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply