நீராடச் சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வாரியபொல குருணவ பிரதேசத்தில் உள்ள வாவியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மூத்த சகோதரர் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இவர் கடற்படையில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.

அவரது இளைய சகோதரர் கித்சிறி அசேல, 34 வயதுடைய திருமணமானவராவார்.

இத்துயர சம்பவம் நேற்று (29) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சடலங்கள் வாரியபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply