அரச ஊழியர் சங்கங்கள் இணைந்து நாளை பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ரயில் ஊழியர்கள் , இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் தனியார் பஸ் சேவை ஊழியர்கள் ஈடுபடமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். புகையிரத மற்றும் பஸ் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அதன் மூலம் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் நாளைய தினம் இயங்கும் பொது போக்குவரத்து சேவைகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் திலும் மேலும் தெரிவித்துள்ளார்.
Follow on social media