இரண்டு வீடுகளில் வளர்க்கப்படும் நாய் , பூனைக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால், இரு வீட்டாருக்கு மத்தியில் கைகலப்பு தீவிரமடைந்து , வாள்வெட்டு சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.
சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான இருவர் இருவர், கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கந்தகெட்டிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த புத்தங்கோட்ட என்ற கிராமத்தைச் சேர்ந்த 45 மற்றும் 47 வயதுகளுடைய ஆண் ஒருவரும் , பெண்ணொருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரு வீடுகளையும் சேர்ந்த நாயும் பூனையும் கடித்து குதறிக் கொண்டதையடுத்து இரு வீட்டாருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதால் கைது செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், விரைவில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்லதாகவும் கூறியுள்ளனர்.
Follow on social media