நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் வலுவிழந்துள்ளது.

இதனால் அதன் தாக்கம் குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுகிறது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply