தொழிலாளர் சங்கத்திற்கு பெருந்தோட்ட மக்கள் இனிமேல் சந்தாப் பணத்தை வழங்க கூடாது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு பெருந்தோட்ட மக்கள் இனிமேல் 150 ரூபா சந்தாப் பணத்தை வழங்க கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஒருசிலரால் அந்தப் பணம் தவறாக கையாளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

´நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை அரசாங்கம் கொண்டு வருமானால் அதளை ஜீரனித்துக்கொள்ள முடியாது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடவுள்ளோம்.

மலையக மக்கள் தொடர்பில் கதைத்தால் 22 பெருந்தோட்ட கம்பனிகளுக்கு பெருந்தோட்டங்களை தாரைவார்த்து கொடுத்த அரசாங்கத்தால் ஏன் ஆயிரம் ரூபாவை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குமாறு உத்தரவிட முடியாது.? இப்போது களவாக ஒரு செயற்குழுவை அமைத்து யோகராஜன் என்ற மலையக மக்களை வைத்து பிழைப்பு நடத்துபவரால் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் நடத்தப்படுகின்றது. அங்கு பெரிய நாடகம் காட்டப்படுகின்றது.

சட்டத்தின்படி நானே அந்த தொழிற்சங்கத்தின் பெர்துச் செயலாளர் ஆகவே லங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு பெருந்தோட்ட மக்கள் இனிமேல் 150 ரூபா சந்தாப் பணத்தை வழங்க கூடாது என வெளிப்படையாக பெருந்தோட்ட மக்களை கேட்டுக்கொள்கின்றேன். நாம் மறுபடி அறிவிக்கும் வரை சந்தாவை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

போலியான வங்கி கணக்கை ஆரம்பித்து பெருந்தோட்ட மக்களின் பணத்தை களவாடியமை அம்பலமாகியுள்ளது. அரசியல் ரீதியாக தோல்வி அடைந்துள்ள ஐ.தே.க தற்போது தொழிற்சங்கத்தின் ஊடாக பிழைப்பு நடத்த தயாராகின்றது என தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply