தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் சிவில் அமைப்புக்கள், அரசியல் வாதிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று (05) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் கைதிகளின் குடும்பங்கள், சிவில் அமைப்புக்கள் இலங்கை வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்கள் ஒன்றினைந்த ஏற்பாட்டையடுத்து இன்று காலை 10 மணியளவில் காந்தி பூங்காவிற்கு முன்னால் தமிழ் அரசியல் வாதிகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேந்திரன், சீ. யோகேஸ்வரன், தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த. சுரேஷ் மாநகரசபை மேஜர் ரி. சரவணபவான் மற்றும் இந்து குருமார்கள் உட்பட பொதுமக்கள் ஓன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துக, பாரபட்சம் பார்க்காதே, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு போன்ற பதாதைகள் ஏந்தியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply