தமிழில் தேசிய கீதம் பாட வேண்டாம் – சர்ச்சையை ஏற்படுத்திய பிக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கை அரசாங்கத்திற்கும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) எதிராக காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பில் பலர் கேள்வி எழுப்பிவந்த நிலையில், தமிழ் மொழியில் பாடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதன்போது அங்கு வந்த பிக்கு ஒருவர் தமிழில் தேசிய கீதம் பாட வேண்டாமென குழப்பம் விளைவித்த காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, போராட்டம் இடம்பெறும் இடத்தில் இருந்த ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து குறித்த பிக்குவிற்கு சில விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளதுடன், நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply