தமிழகம் வரும் இலங்கை ஏதிலிகளுக்கு தற்காலிக புகலிடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்துள்ள இலங்கை ஏதிலிகளுக்கு, தற்காலிக புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க அனுமதியளிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, தமிழகத்தை நோக்கி இலங்கைத் தமிழர்கள் வருகின்றனர்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி குழந்தை ஒன்று உட்பட 16 பேர் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். முதல்வமைச்சரின் ஆலோசனையின்படி, அவ்வாறு வரும் இலங்கைத் தமிழர்கள், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வரும் தமிழர்களுக்கு, ஏற்கனவே தமிழக முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று தற்காலிக புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம், தமிழக முதல்வர் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

இதுவரை 13 குடும்பங்களைச் சேர்ந்த 39 இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தமிழகம் வந்துள்ளனர்.

அவர்களில் 11 ஆண்கள், 11 பெண்கள், ஒரு கைக்குழந்தை உட்பட 17 சிறுவர்கள் உள்ளனர். இந்தநிலையில், இணையவழி காணொளித் தொழில்நுட்பம் மூலம் அவர்களுடன் கலந்துரையாடி முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களின் அத்தியாவசியத் தேவை மற்றும் நலன் குறித்து விசாரித்ததாக தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர் தொடர்பான, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இடைவிடா கோரிக்கையை, அரசாங்கம் தற்பேதைய நெருக்கடி நிலையை மனதிற்கொண்டு, நல்லெண்ணத்துடன் அணுக வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரியுள்ளார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply