தனிப்பட்ட பகை காரணமாக 28 வயது இளைஞர் சூட்டுக் கொலை

மாத்தறை – கொஸ்கொட பகுதியில் இன்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் தெல்கஹ பிரதேசத்தில் காட்டுப்பகுதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட பகையின் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply