ட்விட்டர் மற்றும் யூடியூப் முடக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உலகளவில் திடீரென முடங்கிய ட்விட்டர் மற்றும் யூடியூப் செயலிகளால் பயனாளர்கள் கடும் அவதிகாளாகியுள்ளனர்.

சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் யூடியூப் இணையப் பக்கங்களை உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில், உலகம் முழுவதும் ட்விட்டர் மற்றும் யூடியூப் பக்கங்கள் இப்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியுள்ளன.

இதனால், ட்விட்டர் மற்றும் யூடியூப் பயன்படுத்தாமல் பயனர்கள் அவதிப்பட்டனர். இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ட்விட்டர் மற்றும் யூடியூப் சேவைகள் குறைந்துள்ளன. சுமார் ஒரு மணி நேரமாக முடங்கியிருந்த ட்விட்டர் மற்றும் யூடியூப் பக்கங்கள் தற்போது இயங்கி வருகின்றன.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமை சீராக உள்ளதாகவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதேபோல், இந்த தொழில்நுட்ப கோளாறுக்காக ட்விட்டர் பயனர்களிடம் மன்னிப்பு கேட்கிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply