சேலம் அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை பலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தொளசம்பட்டி அருகே குமரன் காடு பகுதியில், பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கடந்த மாதம் 27-ந்தேதி காட்டுப்பகுதியில் அனாதையாக கிடந்தது. அப்போது அந்த குழந்தை அழுது கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் தொளசம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பச்சிளம் குழந்தையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply